Breaking News

நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதன் மூலமாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 22 தொடர் வெற்றிகளை பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Mount Maunganui யில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையே முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

New Zealandநியூசிலாந்து தரப்பில் தொடக்க வீராங்கனை Lauren Downs 90 பந்துகளில் 134 ரன்கள் அடித்திருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் Megan 32 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவதாக Nicola 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

The Australian women's cricket team has set a new record of 22 consecutive wins by beating the New Zealand women'sஇதற்கு பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

இது மூலமாக 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாயிண்டிங் தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் அணியின் 21 தொடர் வெற்றி என்ற சாதனையை மகளிர் கிரிக்கெட் அணி முறியடித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர் வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியுடனான 2&3 ஆம் ஒருநாள் போட்டிகள் வரும் சனி மற்றும் வியாழக்கிழமை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.