Breaking News

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பயிற்சியில் இருந்து வெளியேறினார் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை : பாலின ரீதியாக தவறான கருத்துகளை பேசி திசை திருப்புவது விளையாட்டில் அதிரிப்பதாக வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு

Australian swimmer withdraws from Tokyo Olympic training session

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை Maddie Groves டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் திடீரென அவர் பயிற்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மேலும் பெண்களுக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பரப்பி, அவர்களை திசை திருப்புவோரின் எண்ணிக்கை நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிகரித்து வருவதாகவும் அவர் அதிரடி குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்றுவந்த பயிற்சியில் பங்கேற்றிருந்த வீராங்கனை Maddie Groves தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கண் ஒளிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளில் இருந்து விலகுவதாகவும் இந்த விஷயம் அதிர்ச்சி அளிப்போருக்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த உறுதியான முடிவில் தான் தெளிவாக இருப்பதாகவும் இந்த ஆண்டில் அடுத்த சில போட்டிகளை நோக்கி தன் இலக்கை நிர்ணயிக்க உள்ளதாகவும் Maddie Groves கூறியுள்ளார்.

Australian swimmer withdraws from Tokyo Olympic training session.ஆஸ்திரேலியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதைப் பார்க்க தான் மிகவும் ஆவலாக இருப்பதாகவும் போட்டிகளை தான் பார்த்துவிட்டு அது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் Maddie Groves தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த பலம்வாய்ந்த தன் அணிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு வாழ்த்துக்களையும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் நீச்சல் பயிற்சியின்போது தன்னுடைய நீச்சல் உடைகளை முறைத்துப் பார்ப்பது சென்னை மிகுந்த நெருக்கடிக்கு ஆளாக்கியது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அந்த நபர்களுக்கு இந்த நேரம் பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன் என்றும் Maddie Groves கூறியுள்ளார்.

Swimming Australia அமைப்பு நீச்சல் வீராங்கனையின் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், ஏற்கனவே புகாருக்கு உள்ளான நபர்களை மீண்டும் இதில் செயல் படாதவாறு அவர்களை திசை திருப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3grmHKL