Breaking News

விலையேற்றத்தால் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய ஊரகப் பகுதிகள்..!!

இறக்குமதி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஊரகப் பகுதிகளில் கடுமையான விலையேற்றம் நிலவுகிறது.

Australian rural areas affected by inflation

இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் பல்வேறு பகுதிகளிலும் விலையேற்றம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை.

வடக்கு மாகானத்தின் ஊரகப் பகுதிகளில் பால், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவச உணவுப் பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் விலைவாசி உயர்வு தொடர்ந்து ஏற்றம் கண்டுகொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவச தேவைகள் முதல் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 2 லிட்டர் பால் அடங்கிய ஒரு கார்டன் பெட்டி 10 டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு கோப்பை காபி 74 டாலருக்கு விற்கப்படுகிறது.

Australian rural areas affected by inflation,மாட்டிறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்றவை 15 டாலருக்கும் அதிகமாக விலையேற்றம் கண்டுள்ளன. வடக்கு மாகாணத்திலுள்ள டார்வின், வாடீஸ் போன்ற பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. உற்பத்தி விலை அதிகரித்ததை தொடர்ந்து, பொருட்கள் மீதான விலையும் உயர்ந்துவிட்டதாக பலரும் காரணம் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அத்தியாவசமான பொருட்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை கடுமையாக உயரவில்லை. தற்போது அரசியல், பொருளாதாரம், பருவநிலை மாற்றம், ஆற்றல் குறைபாடு, எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களால் அனைத்து பொருட்களுக்கான விலையையும் அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் முக்கிய அறிவிப்பு என்று தலைப்பிட்டு, விலையேற்றம் தொடர்பான சுவரொட்டி பல இடங்களில் ஒட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பணவீக்க பிரச்னைகளால் கடந்தாண்டை விட நடப்பாண்டில் 4.3 இழப்பு உணவு தேவையில் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இறைச்சிகளின் விலை 6.7 சதவீதமும் காய்கறிகளின் விலை 6.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.