Breaking News

மாடர்னா தடுப்பூசிக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

Australian Prime Minister Scott Morrison has announced that he has given temporary approval to the modern vaccine.

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு இறுதிக்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்ற இலக்கை எட்டும் விதமாக மூன்றாவது தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய மருந்து பொருள் நிர்வாகத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Australian Prime Minister Scott Morrison has announced that he has given temporary approval to the modern vaccineஅதன்படி மாடர்னா தடுப்பூசிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டாலும், இன்னும் அரசின் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மாடர்னா தடுப்பூசி ஆரம்பக்கட்ட சோதனைக்கு பிறகே தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக மருந்து பொருள் நிர்வாகத்துறை தலைவர் John Skerrit தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருந்து பொருள் நிர்வாகத்துறை தலைவர் ஜான் ஸ்கெரிட், மற்ற ஐரோப்பிய நாடுகளில் மாடர்னா தடுப்பூசி நல்ல பலன் தருவதாகவும், தொற்று பாதிப்புக்கு எதிராக 93 சதவீதமும், தீவிர நோய் தாக்குதலில் இருந்து 98 சதவீதமும், இறப்பு 100% தவிர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதிக்குள்ளாக 10 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Australian Prime Minister Scott Morrison has announced that he has given temporary approval to the modern vaccine,அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் சாராசரியாக 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். நம்மிடம் போதிய மருத்துவர்களும், செவிலியர்கள் இருந்தாலும், தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தற்போது மாடர்னா தடுப்பூசி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால இந்தாண்டு இறுதிக்குள் 70% தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மருந்து பொருள் நிர்வாகத்துறை தலைவர் ஜான் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3Aurfbw