இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தினமும் லட்சக்கணக்கான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களாக சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அந்நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தடை மே 15 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், மீட்பு விமானங்களுக்கும் இது பொருந்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 9000 பேர் இந்தியாவில் தற்போது உள்ளதாகவும் அவர்களுடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பில் இருபதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அதே போன்று சிங்கப்பூர், தோஹா மற்றும் கோலாலம்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வரும் தொடர்பு விமானங்களுக்கும் சம்பந்தப்பட்ட நாடுகள் தடை விதித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமையை சமாளிக்க ஆஸ்திரேலிய முதற்கட்டமாக 500 வெண்டிலேட்டர் கருவிகள், 1 மில்லியன் முகக்கவசங்கள், 5 லட்சம் P2 மற்றும் N95 மாஸ்குகள் வழங்கப்ப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு உதவ ஆஸ்திரேலிய அரசு மறுப்பதாக வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், மே 15 ஆம் தேதிக்கு பிறகு அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
9 ஆயிரம் பேரில் சுமார் 650 நபர்களுக்கு தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளதாகவும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தீர்க்கமுடியாத பிரச்சனை இல்லை என்றும், உதவி தேவைபடும் ஆஸ்திரேலிய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க ஆஸ்திரேலிய அரசு தயாராகவே இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க தூதரக அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3sZ3Via