Breaking News

ஆஸ்திரேலிய காவல்துறை மற்றும் தாஸ்மானிய காவல்துறை சேர்ந்து மேற்கொண்ட சோதனையில் $4.5 மில்லியன் மதிப்புள்ள போதை பொருளை கைப்பறியுள்ளனர்.

Australian police and Tasmanian police have seized $ 4.5 million worth of drugs in a joint operation

ஸ்பெயினில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்த பார்சல் ஒன்றை சோதனையிட்ட ஆஸ்திரேலிய போலீசார் அதில் சுமார் 3 கிலோ எடை கொண்ட மெத்தப்பட்டமைன் என்கிற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

Australian police and Tasmanian police have seized $ 4.5 million worth of drugs in a joint operation.அதில் இருந்த போதை பொருளை நீக்கிய போலீசார், அதற்கு பதிலாக வேறு ஒரு பொருளை வைத்து அதே முகவரிக்கு அனுப்பினர். பார்சலை தொடர்ந்து கண்காணித்து வந்த ஆஸ்திரேலிய போலிசாரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் அந்த பார்சல் தாஸ்மானியாவில் உள்ள முகவரிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்தனர்.

பிறகு தாஸ்மானிய போலிசாரின் உதவியுடன் அந்த பார்சலை பெற்ற நபர்கள் இருவரை ஹோபர்டின் புற நகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். இருவரும் 50 வயதை கடந்தவர்கள் என்றும் ,அவர்கள் ஹோபர்ட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் போதை பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Link Source: https://ab.co/3iw8ZrJ