Breaking News

பிரான்ஸ் உடனான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் : தங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அறிவிப்பு

90 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 12 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2014ஆம் ஆண்டு பிரான்சு ஆஸ்திரேலியா மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உடனான கூட்டணிக்கு பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தது. ஆக்கஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்கு பின்னதாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.

Australian PM Modi says he has no regrets over cancellation of nuclear submarine deal with France,ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை பிரான்சை கடும் கோபம் கொள்ளச் செய்தது. ஆத்திரேலியா தங்களை முதுகில் குத்தி விட்டதாகவும், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் பிரான்ஸ் கடுமையாக சாடியது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கான தங்கள் தூதரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது தங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றும், தங்களுக்கு நாட்டு நலனே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் ஏமாற்றம் தனக்கு புரிவதாகவும் ஆனால் இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்கு தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிரான்ஸ் அரசின் ஆழ்ந்த கவலை தங்களுக்கு புரிவதாகவும் அதேநேரத்தில் நாட்டு நலனை பிரதானமாகக் கொண்டே சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Australian PM Modi says he has no regrets over cancellation of nuclear submarine deal with France,.,ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு பிரான்ஸ் உடனான நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தத்தை தொடர்வது என்பது ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தாக முடியும் என்றும், அதே நேரத்தில் சீனாவை எதிர்கொள்வதற்கு மூன்று நாடுகள் இணைந்து செயல்படும்போது அமெரிக்காவுடன் தாங்கள் அந்த ஒப்பந்தத்தை தொடர்வது சரியானதாக இருக்கும் என ஆஸ்திரேலியா முடிவு செய்ததாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை மிகவும் அலட்சியம் வாய்ந்தது என்றும் இதுபோன்ற பொய்யான செயல்பாடுகளில் அந்நாடு மீண்டும் ஈடுபடக்கூடாது என்றும் சாடியுள்ளார். சக நாடுகளை இத்தனை கடுமையான போக்குடன் கையாள்வது சரியானது அல்ல என்றும் இதனை ஆஸ்திரேலியா புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவு துறை அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/fwEI1