கார்டியர் கடிகார ஊழலை தொடர்ந்து பதவியில் இருந்து வெளியேறிய கிறிஸ்டினா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து க்ரீன் குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில், Greens செனட்டர் Sarah Hanson-Young அளித்துள்ள அறிக்கையை வரேவற்பதாக கிறிஸ்டினா கூறியுள்ளார்.
அறிக்கையில் 25 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. விசாரணையின்போது இந்த பரிந்துரைகளை பெரும்பாலும் கூட்டணியில் இருக்கும் உறுப்பினர்கள் யாரும் ஆதரிக்கவில்லை என்றும் கிரீன் குழு தெரிவித்துள்ளது. அறிக்கையில் அவர்கள் தலைமை நிர்வாகத்தையும் சேர்த்துள்ளனர் மேலும் பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்ளிட்ட அமைச்சரவை கிறிஸ்டினாவிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் கிரீன்ஸ் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரை பிரதமர் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை என்றும் ஆனால் மன்னிப்புக் கோரும் இந்த அறிக்கையின் முடிவை வரவேற்பதாகவும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது என்றும், எப்போது நிகழ்வுகள் தவறாக செல்கிறதோ அப்போது உரிய நபர்களிடம் மன்னிப்பு கேட்டு அதை கடந்து செல்வதே சரியான முடிவாக இருக்கும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றும் கிறிஸ்டினா கூறியுள்ளார். இந்த முடிவை வரவேற்கும் அதே நேரத்தில் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாகவும் கிறிஸ்டினா ஹோல்கேட் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டினா விவகாரத்தை சரியாக கையாள முடியாத தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி Lucio Di Bartolomeo பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அரசுக்கு கேள்வி பணியாற்றுவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது இது போன்ற தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் உடைய கடமை என்றும், தனக்கு ஏற்பட்டது மற்ற யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் கிறிஸ்டினா கூறியுள்ளார். அப்போதுதான் நிறுவனத்தின் மீதும், தலைமை மீதும் நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்னிப்பு கோர முடியாது என்றும், இந்த அறிக்கை முழுவதும் அரசியலாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது முழுக்க தனிநபர் நலனையே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு ஒரு நிறுவனம் எப்போதும் துணை போக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் கிறிஸ்டினா கோல்கேட் சிறந்த தலைமை நிர்வாகி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவருடைய அடுத்தடுத்த பயணங்களுக்கு பிரதமர் அலுவலகம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளது.
Link Source: https://ab.co/3vqNWex