Breaking News

Australian Partner Visa-விற்கு ஆங்கில மொழி அறிதல் அவசியம் !

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து குடியேறிய மக்கள் Partner Visa விண்ணப்பிப்பதற்கு ஆங்கில மொழி தேர்ச்சி அல்லது அதை படிப்பதற்கான பயிற்சி இருத்தல் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை கூட்டுவதற்கு இது உதவியாக இருக்கும்.

Partner Visa விண்ணப்பங்களுக்கான ஆங்கில மொழி தேவை பற்றிய தகவல்களை கடந்த வியாழன் அன்று அரசு அறிவித்தது.
ஆங்கில மொழியை சரளமாகப் பேசுபவரகள் 62 சதவீதமும் ,ஆங்கில மொழி தெரியாதவர்கள் 13 சதவீதமும் தற்போது வேலையில் இருப்பதாக திரு Tudge தெரிவித்தார்.

போதுமான ஆங்கில அறிவு இல்லாத மக்கள், குறிப்பாக புலபெயர்ந்தவர்கள் குடும்ப வன்முறைக்கும் மற்ற ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். யாரிடம் என்ன உதவி கிடைக்கும் என்ற அறிதல் இல்லாமல் இருக்கிறார்கள்.இரண்டு வருட Provincial Visa-வில் ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்களுக்கு ஆங்கில பரிசோதனை அவசியமில்லை. ஆனால் அவர்கள் Permanent visa எடுக்கும் பொழுது தேவையான ஆங்கில அறிவு அல்லது குறைந்தபட்சம் அதை படிப்பதற்கான முயற்சி எடுப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது .

Adult Migration English Program மூலம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் என Tudge தெரிவித்தார்.இந்த முயற்சிகளினால் அரசிற்கு நான்கு வருடங்களில் 5 மில்லியன் டாலர்கள் சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ,ஆங்கில மொழி பேசாதவர்களை மணமுடித்த ஆஸ்திரேலியர்கள் பதற்றமடைந்துள்ளனர். ஆங்கில புலமைக்கும் மணவாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று Andrew Gills கேள்வி எழுப்பியுள்ளார் . இது மேலும் மன உளச்சல்களைக் கொடுக்கும் என்று Liz Allen தெரிவித்துள்ளார்.

இதை மறுத்து பேசிய திரு Morisson ஆங்கில மொழி தெரியாமல் இங்கு வரலாம் ஆனால் வந்த பிறகு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அரசு உதவியாக இருக்கும் என்று விளக்கம் அளித்து உள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டின்படி ஆஸ்திரேலியாவின் net overseas migration பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் வெளியே சென்றுவிட்டதும், புதியதாக வருபவர்களுக்கான கட்டுபாடுகள் தளர்த்தப்படாமல் இருபதுமே migration குறைந்ததற்கான காரணம்.

ஆஸ்திரேலிய குடிமக்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி வெளிவந்த பிறகு எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்.
Partner Visa பற்றிய மேலும் விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என்று Tudge தெரிவித்தார்.