Breaking News

ஆஸ்திரேலிய நேஷனல் கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் கைப்பற்றினார் Barnaby Joyce : சர்ச்சைகளில் இருந்து மீண்டு மீண்டும் துணை பிரதமாகிறார்

Australian National Party leader Barnaby Joyce re-elected as Deputy Prime Minister

கடந்த திங்களன்று நடந்த வாக்கெடுப்பில் முன்னாள் நேஷனல் கட்சித் தலைவர் Michael McCormack வீழ்த்தி Barnaby Joyce தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கவர்னர் ஜெனரலின் அரசு இல்லத்தில் பதவியேற்பு நடைபெற்றது.

இதில் கவர்னர் ஜெனரல் David Hurley பங்கேற்றார். இங்கிலாந்து சென்று திரும்பிய நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். McCormack வகித்த துணை பிரதமர் மற்றும் உள்கட்டமைப்பு, மாகாண மேம்பாடு துறை அமைச்சர் பொறுப்பும் Barnaby Joyce வசம் வந்துள்ளது.

Australian National Party leader Barnaby Joyce re-elected as Deputy Prime Minister.Barnaby பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நேஷனல் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி Backbench உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்ற தலைமை பதவிக்கான தேர்வில் Barnaby மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டு காலம் Backbench உறுப்பினராக செயல்பட்டு வந்த தன்னை காலம் ஒரு சிறந்த மனிதனாக மாற்றி உள்ளதாக Barnaby Joyce கூறியுள்ளார்.

குயின்ஸ்லாந்து செனட்டர் Bridget McKenzie கொண்டு வந்த Leadership spill Motion-ல் தோல்வி அடைந்த Michael McCormack தான் வகித்து வந்த துணை பிரதமர் மற்றும் கட்சித்தலைமை பொறுப்பை இழந்துள்ளதால் கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களிடம் பேசும் நபர் தான் அல்ல என்றும், புதிய தலைவர் Barnaby Joyce க்கு அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் Barnaby Joyce குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Link Source: https://ab.co/35LRblE