Breaking News

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

The Australian government plans to undertake development work worth about $ 10 billion to offset the economic damage caused by the corona.

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை போக்க ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைமையை சமாளிக்கவும், மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் ,உற்பத்தியை பெருக்கவும், நாட்டின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும்.

The Australian government plans to undertake development work worth about $ 10 billion to offset the economic damage caused by the corona10 ஆண்டு இலக்குடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், மெல்போர்ன் பகுதியில் புதிய சரக்கு முனையம் 2 பில்லியன் டாலர் மதிப்பிலும், katoomba மற்றும் Lithgow இடையே உள்ள நெடுஞ்சாலை 2 பில்லியன் டாலர் மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் துரோரா நெடுஞ்சாலை, தாஸ்மானியா பேஸ் நெடுஞ்சாலை, வடக்கு பிராந்தியத்தில் உள்ள நெடுஞ்சாலை உட்பட குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதைகளை மேம்படுத்த ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு செலவழிக்கும் இந்த தொகையானது ஆஸ்திரேலியாவின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் அதே நேரத்தில், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3tzo4LW