Breaking News

கொரோனா தொற்றை வீடுகளிலேயே கண்டறியும் பரிசோதனை கருவியை நவம்பர் முதல் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய மருத்துவ நிர்வாகத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தொற்றை உறுதி செய்ய ஆர்.டி.பிசி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம் ரேப்பிட் அண்ட் ஜென் கருவிகள் மூலமாக
கொரோனாவை கண்டறிவதற்கு இன்னும் முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதேநேரம் முப்பத்தி மூன்று வகையான ரேபின் அண்டி ஜென் கருவிகளுக்கு தற்போது ஆஸ்திரேலிய மருத்துவ பொருள் நிர்வாக துறை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பரிசோதனை கருவிகளை பயிற்சி பெற்ற மருத்துவர் முன்னிலையிலேயே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. பொதுமக்கள் இந்த கருவிகளை வீடுகளில் அவர்களாகவே பரிசோதித்துக்கொள்ள பயன்படுத்த முடியாது .

The Australian Department of Medical Administration has approved the use of a corona infection home diagnostic tool since Novemberஇந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களைத் தாங்களே பரிசோதனை செய்துக் கொள்ளக்கூடிய ரேபிட் பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவதற்கு மருத்துவத்துறை ஒப்புதல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை கருவிகள் மூலமாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதை 20 நிமிடங்களிலேயே தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் இதனை எவ்வாறு பயன்படுத்துவது யாரெல்லாம் பயன்படுத்துவது என்பது போன்ற விதிமுறைகளை மாநிலங்களே முடிவு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளார் .

குறிப்பாக ஏனென்றால் இதுபோன்ற ஒரு கொள்கை முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் தாங்கள் விரும்புவது ரேபிட் கருவியின் மூலமாக கொரோனா உறுதி செய்யப்பட்டாலும் அவர்களுக்கு ஆர்டிபிசியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார் .

Australian Department of Medical Administration has approved the use of a corona infection home diagnostic tool since November.அதேநேரம் இந்த ஆண்டி ஜென் கருவிகள் ஆஸ்திரேலியா முழுமைக்கும் ஒரே அளவில் பயன் தராது என்றாலும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் போன்ற தொற்று பரவலாக இருக்கக்கூடிய மாகானங்களுக்கு இத்ய் பெருமளவு உதவி புரியலாம் என்றும் ஒரு பகுதியில் தோற்று ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் டெல்டா வகை வைரஸை கண்டறியக் கூடிய வகையில் இந்த ஆண்டி ஜென் கருவி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளில் டெல்டா வகை வைரஸ் தாக்கம் அதிகளவில் இல்லாத நிலையில் ஆஸ்திரேலியாவில் அதனுடைய வீச்சு சற்று அதிகமாக உள்ளது. எனவே ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தக் கூடிய பரிசோதனை கருவிகள் டெல்டா வைரஸ்களை கண்டறிய கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3AOgaTu