பிரிட்டன் நாட்டின் கைண்டு 26 போர்க்கப்பலை தயாரித்த நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்கு ஹண்டர்-கிளாஸ் போர்கப்பலை வடிவமைத்து தருகிறது. இதற்காக 45 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதை தொடர்ந்து ஆக்கஸ் ஒப்பந்தம், உக்ரைன் போர் தொடர்பான விபரங்களையும் அங்குள்ள தலைவர்களிடம் கிரெக் மொரியார்டி கேட்டு அறியவுள்ளதாக, ஆஸ்திரேலிய அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நேரத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர் இங்கிலாந்துக்கு செல்வது சர்வதேச அரசியலில் கவனமீர்த்துள்ளது. அவருடைய இங்கிலாந்து பயணம் ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.