பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை பல்வேறு நாட்டு அணிகள் தவிர்த்து வருகின்றனர் நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள இந்த போட்டிகள் பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.
இறுதியாக 1998 மற்றும் 99ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானில் விளையாட உள்ளது. டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானும் ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.
அடுத்த ஆண்டு 2022 மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது. மார்ச் 3ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியிலும், 2வது டெஸ்ட் ராவல்பிண்டியிலும், 3வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகள் லாகூரிலும் நடக்கின்றன. இதற்கு முன்னதாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் தங்களது போட்டிகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சர்வதேச சுற்றுப் பயணத்துக்கான அனுமதி கிடைத்து தற்போது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு வீரர்களுக்கான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை செயல் அதிகாரி Nick Hockley கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/30b7Yz5