Breaking News

உக்ரைன் அகதிகளுக்கு கதவுகளை திறந்த ஆஸ்திரேலிய தம்பதி..!!

Australian couple opens doors to Ukrainian refugees

சிட்னியில் வசித்து வரும் தம்பதி, போர் சூழல் காரணமாக உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு இருக்க இடம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து உதவி வருகின்றனர்.

Australian couple opens doors to Ukrainian refugees.தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த டேல் மற்றும் கெல்லி லையின்பெர்க் தம்பதி. இவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்காக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றன. ஆரம்பத்தில் தென் ஆஃப்ரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வந்த போது, எந்தவித உதவியும் கிடைக்காமல் இருந்துள்ளது. அதை மனதில் வைத்து, போர் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் உக்ரைன் மக்களுக்கு அவர்கள் உதவி வருகின்றன. உக்ரைனில் இருந்து நான்கு பேருடன் வந்த டோரஷ் குடும்பத்தினருக்கு டேல் மற்றும் கெல்லி ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

மிகவும் கடுமையான சூழலுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கிடைத்துள்ளது டோரஷ் குடும்பத்துக்கு ஆறுதலாக உள்ளது. இவர்களுக்கு நன்றி சொல்லாமல் அந்த குடும்பத்தினர் ஒருநாள் உண்பது கிடையாது மற்றும் அதேபோல தூங்கச் செல்வதும் கிடையாது.

டேல் மற்றும் கெல்லி மட்டும் இல்லாமல் மொத்தம் 1500 குடும்பங்கள் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. வெறும் இருப்பிடம் மட்டுமில்லாமல், உக்ரனைச் சேர்ந்த குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் கல்வியை தொடரவும் பலர் வழிவகை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/36SmTlh