Breaking News

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது துருப்புக்களை முழுவதுமாக வெளியேற்றியது ஆஸ்திரேலியா : 20 ஆண்டுகால நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது

Australia withdraw all troops from Afghanistan, 20 years of operations come to an end

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தனது படைகளை கடந்த இருபது ஆண்டு காலமாக அங்கு நிறுவி இருந்தது.

2001 செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து அமெரிக்கா தன்னுடைய படைகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வந்தது. பல்வேறு முறை படைகளை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். பாதிப்பை குறிக்கும் வகையில் அதே செப்டம்பர் 11ஆம் தேதி படைகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் 80க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அவர்களது உடமைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு குழுவாக ஆஸ்திரேலியா திரும்பத் தொடங்கியுள்ளனர். நிலையில் 20 ஆண்டுகால ராணுவ நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானில் முடிவுக்கு வந்துள்ளது.

காபூலில் இருந்து பெரும்பாலான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கூறப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி அதிகாரபூர்வமாக தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Australia withdraw all troops from Afghanistan, 20 years of operations come to an end.அதேநேரத்தில் ஆஸ்திரேலிய படைகள் இன்னும் மத்திய பகுதியில் இருப்பதாகவும் அவை முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பான தகவலை ஆஸ்திரேலிய ராணுவம் தெரிவிக்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் பேட் மோரிசனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகள் என்னவாக இருந்தது என்பது தொடர்பான அறிவிப்பை பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு எந்த விவரங்களும் தற்போது வெளியிடப்படாது என்றும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இருபது ஆண்டுகால செயல்பாடுகள் என்பவை சாதாரணமானது அல்ல என்றும் அதில் ஏராளமான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் என்றும் பலர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயமடைந்து இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று அமெரிக்காவுக்கு அடுத்ததாக பெரிய படைகளை கொண்டிருந்த ஜெர்மனியும் திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3w4fgPj