Breaking News

உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும்- கீவில் பிரதமர் அல்பானிஸ் உறுதி..!!

உக்ரைனின் தலைநகரான கீவ்வுக்கு சென்ற பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை செய்ய தாயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

Australia will continue to help Ukraine - Prime Minister Albanese assured in Kyiv

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடந்த நேட்டோ கூட்டத்தில் பங்கேற்கபதற்காக சென்ற ஆண்டனி அல்பானிஸ், தொடர்ந்து ஐயோப்பா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திடீரென்று முன்னறிவுப்பு எதுவும் இல்லாமல், கடந்த ஞாயிறு அன்று போலாந்து வழியாக உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் அல்பானிஸ், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தார். அப்போது அவர் 68 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை அந்நாட்டுக்கு வழங்கினர். அதில் தானியங்கி ட்ரோன் விமானங்கள் மற்றும் 34 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

Australia will continue to help Ukraine - Prime Minister Albanese assured in Kyiv.ஆஸ்திரேலியாவில் ரஷ்ய தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், அந்நாட்டின் முக்கிய 16 அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிப்பதாக பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் அறிவித்தார். தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட புச்சா, இர்பின் போன்ற பகுதிகளுக்கு சென்ற அவர், போரில் உயிரிழந்த மக்களுக்காக மெழுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து கீவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் அல்பானிஸ், ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்யும். கூடுதலான பல்வேறு கட்ட உதவிகளுக்கு வேண்டி உக்ரைனுக்கு 390 மில்லியன் வழங்கப்படுகிறது. மீண்டும் உக்ரைனிலுள்ள தங்களுடைய தூதரகங்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. ஆஸ்திரேலியாவும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.