Breaking News

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஒன்றிணைந்து சீனாவை முடக்க போடப்பட்ட ஆக்கஸ் திட்டம் : இது அனைவருக்குமான பொது அபாயம் என சீனா எச்சரிக்கை

Australia, US, UK work together to block China's AUKUS plan. China warns of common threat to all

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.

Australia, US, UK work together to block China's AUKUS plan. China warns of common threat to all.இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும். AUKUS என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

ஆஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

Australia, US, UK work together to block China's AUKUS plan. China warns of common threat to all..இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர். ஆக்கஸின் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பிரான்ஸ் மற்றும் சீனா கடும் கண்டனம் தெரவித்துள்ளது. ஆக்கஸ் கூட்டு திட்டம் அவர்கள் காலிலேயே சுட்டுக் கொள்ளும் முயற்சி என சீனா கூறியுள்ளது.

Link Source: shorturl.at/otILO