Breaking News

ஆஸ்திரேலியா, ஐக்கிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இணைந்து நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நிறுவ உள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் மூன்று நாடுகளும் இணைந்து அணுசக்தியை கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு குறித்த பிரதமர் ஸ்காட் மோரீசன் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். அப்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூலதனம், அரசியல், பொருளாதாரம் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Australia, the United States and the United States are to set up a submarine base off the east coast of Australiaஅதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அமையவுள்ள புதிய நீர்மூழ்கிக் கப்பல் தளம் குறித்தும் பேசுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த கப்பல் தளத்தின் மூலம் நாட்டின் அணுசக்தி ஆற்றலை அதிகரித்துக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள பிரிஸ்பேன், நியூ காஸ்டில், கெம்பாலா துறைமுகம் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எனினும் பாதுகாப்புத் துறை கெம்பாலா துறைமுகம் புதிய நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகத்தை அமைக்க ஏற்ற இடமாக இருக்கும் என்று எண்ணுகிறது.

நடப்பாண்டில் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது இந்த கப்பல் தளம் கட்டுவது தொடர்பான வடிவமைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசித்து முடிவு செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Link Source: https://ab.co/3My7zdY