Breaking News

இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்களை ஈர்க்கும் விதமான புதிய திட்டங்களுக்கு ஆஸ்திரேலியா 11.2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு : கல்வி, சமூகம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான மைத்ரி திட்டம் அறிவிப்பு

Australia spends $ 11.2 million on new projects to attract more students from India. Maitri Project Announcement for Improving Education, Community and Culture

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக கல்வி, சமூகம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் அனைத்து பிரிவுகளிலும் சுமூகமான நல்லுறவைப் பேணும் வகையில் புதிய திட்டமான மைத்ரி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வரவேற்கப்படுவதாகவும், இந்தத் திட்டத்துக்காக 11.2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான சந்திப்பில் இதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருநாட்டு உறவை அனைத்து துறைகளின் மட்டத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்று அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற இந்த குவாட் சந்திப்பில் முதன் முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

Australia spends $ 11.2 million on new projects to attract more students from India, Maitri Project Announcement for Improving Education, Community and Cultureகல்வி, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் அதிக அளவில் மாணவர்களை ஈர்க்கும் விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக நட்பின் அடையாளமாக மைத்ரி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பல்வேறு கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் விதமாக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அதற்காக 6.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும் இரண்டு தரப்பிலும் கையெழுத்திட பட்டிருப்பதாகவும் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் தற்போது புதிய திட்டங்கள் வாயிலாக மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித் தொகையுடன் கூடிய இது போன்ற சிறப்பு திட்டங்கள் இந்திய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டங்கள் நிச்சயம் பலன் அளிக்கும் என்றும் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3E1SwFv