Breaking News

மனித உரிமை மீறல்களை பற்றி ஆஸ்திரேலியா விமர்சிக்கக் கூடாது-சீனா !

வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne, மனித உரிமை மீறல்களை பற்றி ஆஸ்திரேலியா விமர்சிக்கக் கூடாது என்ற சீனாவின் கருத்துக்களை நிராகரித்தார், மேலும் பழங்குடியின மக்கள் அங்கு எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

marise payneBeijing பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளிப்பது கான்பெராவின் நிலையை வெளிவேஷமாக்கியது என கூறியதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா சீனாவின் அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பதாக உறுதியளித்தது. Xinjiang-இல் Uighur மக்களிடம் சீனா நடந்து கொள்வது குறித்து Marise Payne தொடர்ந்து பேசுவதாக கூறினார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi இனப்படுகொலையை பற்றி பேசும் போது, 16ஆம் நூற்றாண்டின் பூர்வீக அமெரிக்கர்கள்,19-வது நூற்றாண்டின் ஆப்பிரிக்க அடிமைகள், 20-வது நூற்றாண்டின் யூத மக்கள் மற்றும் தற்போது வரை போராடும் பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் மனதில் இருப்பார்கள் என அவர் கூறினார். மேலும் Xinjiang-இல் இனப்படுகொலை இருப்பதாகக் கூறுவது மிகவும் தவறானது எனவும், அது ஒரு வதந்தி மற்றும் பொய்யானது எனவும் கூறினார்.

Marise Payne கூறுகையில், கட்டாயமாக உழைக்க சொல்வதும், கட்டாய கருத்தடை மேம்பாடு, பெண்களை சித்திரவதை செய்தல் மற்றும் பல விதமான செயல்களை கூறும் சான்றுகள் மனித உரிமைகளை மீறுகின்றன, எனக் கூறினார்.

Xinjiangகின் பாதுகாப்பு மற்றும் தரத்தினை குறைந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்துவதும், சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கும் அரசியல் சூழ்ச்சி மற்றும் இங்கு பிரச்சனைகளை உருவாக்குவதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு முக்கிய அம்சமாக சீனாவுடனான உறவுகளில், ஆஸ்திரேலியா மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை மீண்டும் மீண்டும் எழுப்பியுள்ளது.