Breaking News

Australia ‘s Parent Visa விதிகள் குடும்பத்தினை சிதறடிக்கின்றன என குற்றச்சாட்டு!

VISA விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் போது, விண்ணப்பதாரர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்க அனுமதிக்குமாறு, Family visa விதிகளில் தற்காலிக மாற்றங்களை கொண்டுவர Federal அரசு அழுத்தத்தினை சந்தித்து வருகிறது. கடந்த நவம்பரில் சில Partner Visa விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சிலருக்கு இன்னும் அந்த சலுகைகள் கிடைக்கப் பெறாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தம்பதிகளான Can Liu மற்றும் Julie Jin, Melbourne -ல் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டினால் ,Can -ன் பெற்றோர்கள் இங்கேயே அவர்களுடன் தங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். சீனாவை சேர்ந்த இவர்கள், கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகின்றனர். அவர்கள் Contributory Parent Visa-க்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். Federal அரசின் 143 விசா விதிகளின்படி, விண்ணப்பதாரர்களுக்கு Visa அனுமதிக்கப்படும் போது, அவர்கள் வெளிநாட்டில் இருக்கவேண்டும் என்பது இந்த தம்பதிகளை கவலையடைய செய்துள்ளது.

தனது மாமனார் மற்றும் மாமியார்,6 1/2 வருட Visaக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் விண்ணப்பம் கடைசி கட்டத்தில் உள்ளது என்று Julie தெரிவித்தார். அவர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென Immigration Deparment தகவல் அளித்துள்ளது. இல்லையென்றால் அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Visa விண்ணப்பிப்பதற்கான ஏற்கனவே அவர்கள் $100,000 செலவு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .இப்போதைய சூழ்நிலை மிக கடினமாக இருப்பதாகவும் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக நுழைய வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்றும் இவர் தெரிவித்துள்ளார். இது கொரோனா பரவல் காலம் என்பதால், பல நாடுகள் தங்கள் எல்லைகளில் மூடி வருவதாலும் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாலும், வெளிநாடுகளில் மாட்டிக் கொள்வதற்கான அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா கால கட்டத்தில், தன்னுடைய பெற்றோர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக Can தெரிவித்துள்ளார். இக்காலகட்டத்தில் குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப் படுவதாலும், திடீரென விமான சேவைகள் நிறுத்தப்படுவதாலும் எனது பெற்றோர்கள் வேறு ஏதாவது நாடுகளில் பரிதவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

பைத்தியக்காரத்தனம்

Visa விதிகள் மாற்றப்படுவது அவசியம் என தான் நினைப்பதாக Labour MP Julian Hill தெரிவித்துள்ளார். கொரோனா சமூக பரவலுக்கிடையே, குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு செல்லும் படி கட்டாயப்படுத்துவது மற்றும் திரும்ப வரும்போது தனிமைப்படுத்தலில் இருப்பது என இவை அனைத்தும் பைத்தியகாரத்தனம் என அவர் தெரிவித்துள்ளார் . கிறிஸ்துமஸ்-க்கு முன்பாக, தங்களுடைய வயதான பெற்றோர்கள் நாட்டை விட்டு செல்ல கட்டாயப்படுத்தபடுவார்கள் என்றும், அதிக அளவிலான விமான கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் ,வேறு ஏதாவது நாடுகளில் இவர்கள் பரிதவிக்கும் அபாயம் இருக்கும் என்றும் மற்றும் தனிமைப்படுத்துதலில் தங்கள் நாட்களை கழிப்பார்கள் என்றும், பல ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய குடும்பங்கள் பயத்தில் உள்ளனர். ஆதலால் அவர்களுக்கு தேவையான Visa-வினை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நமது கலாச்சாரத்தில் பெற்றோர்கள் மிக முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் என்றும் , எந்த ஒரு சரியான காரணம் இல்லாமல் அவருடைய குடும்பம் சிதறடிக்க படுவதாகவும் Julie உணர்கிறார். இந்த காலக்கட்டத்தில் எளிதாக தொற்றுக்கு ஆளாகும் மக்களை பாதுகாப்பது மட்டுமில்லாமல், இந்த சமுதாயத்தின் அங்கமாக இருக்கக்கூடிய மக்களை இந்த அரசு நன்கு கவனித்துக் கொள்ளும் என்று தான் விரும்புவதாக அவர் கூறுகிறார். Partner Visa விண்ணப்பதாரர்களுக்கு இந்த விதியினை நீக்கி, தற்காலிக சலுகையை, கடந்த மாதம் இந்த அரசு வழங்கியது. அதே சலுகையை இந்த பெற்றோர்களுக்கும் இந்த அரசு வழங்கும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது கொரோனாவால் ஏற்படக்கூடிய தடைகளை இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டது என்று தனது அறிக்கையில் Spokesperson of Deparment of Home Affairs தெரிவித்துள்ளார். விசா அனுமதிக்கப்படும் போது வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்ற தேவை உட்பட அனைத்து அத்தியாவசியமான தேவைகளையும் சரிசெய்ய போதுமான அளவுக்கு நேரமும் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொடங்குவதற்கு முன்பாக இந்த விதி அமலில் இருந்தன. தற்போது விண்ணப்பதாரர்களிடம் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுவாக கேட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .Federal அரசின் தற்காலிக சலுகைகளில் Parent Visa விண்ணப்பதாரர்கள் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் Immediate குடும்ப உறுப்பினர்களாக கருதப்படாததால், Parent Visa விண்ணப்பதாரர்கள் இந்த அரசின் இந்த தற்காலிக சலுகைகளில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் சட்டரீதியாக திருமணம் ஆகாமல் உடன் வசிப்பவர் , குழந்தைகள் மற்றும் சட்டரீதியான பாதுகாவலரும் இந்த Immediate குடும்ப உறுப்பினர்களில் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.