Breaking News

ஆஸ்திரேலியாவில் 2050 -ல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவது தொடர்பான திட்டம் : ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக மெளனம் காக்கும் கூட்டணி கட்சிகள்

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டையொட்டி ஆஸ்திரேலிய அரசு நிர்ணயித்துள்ள 2050 -ல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு தொடர்பாக தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் துணை பிரதமர் Burnaby Joyce உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மௌனம் காத்து வருகின்றனர். ஒரு வாரகாலம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்ட பின்னதாக தங்கள் கட்சி பூஜ்ஜிய உமிழ்வு இலக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்று மட்டும் அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் எந்த விதமான விளக்கத்தையும் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் Burnaby Joyce உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு தொடர்பாக தங்களது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Australia plans to achieve zero emissions target by 2050. Coalition parties remain silent on supportஆஸ்திரேலிய அரசின் பூஜ்ஜிய உமிழ்வு பருவநிலை தொடர்பான இந்தத் திட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தேசியத் தலைவர்கள் தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்காத நேரத்தில், Burnaby Joyce உள்ளிட்ட தலைவர்களும் தங்களது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். கட்சியைப் பொறுத்தவரை தாங்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும், அதே நேரத்தில் தாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் Burnaby Joyce தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற உள்ள COP 26 பருவநிலை மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கலந்து கொள்ள உள்ளார். அப்போது பூஜ்ஜிய உமிழ்வு தொடர்பான பல்வேறு விவகாரங்களை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Australia plans to achieve zero emissions target by 2050. Coalition parties remain silent on support..அதே நேரத்தில் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் என்ன என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. துணைப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் பூஜ்ஜிய உமிழ்வு திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றால், அதற்காக மோரிசன் அரசு செய்ய வேண்டியவை என பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு வைத்திருப்பதாகவும் ஆனால் அவற்றை அவர்கள் தற்போது வெளியிட மறுப்பதாகவும் கூறப்படுகிறது. அரசில் கூடுதலாக கேபினட் பொறுப்புக்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மற்ற கட்சியின் கோரிக்கைகள் நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கோரிக்கை சட்டபூர்வமான தாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதி உருவாக்கப்படும் திட்டங்களை ஆதரிப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஆளும் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3vJFkRr