Breaking News

நேட்டோ பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியா? உண்மை என்ன??

நேட்டோவில் பங்கொள்ளாவிட்டாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவான மனநிலையுடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறியதன் பின்னணி தகவல்களை ஆராயலாம்.

Australia on the NATO list What is the truth

கடந்த மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியா நேட்டோவில் இடம்பெறாதது பற்றியும், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவதை குறித்து பிரதமர் அல்பானிஸ் தீவிரமாக பேசி வருகிறது. உண்மையாகவே உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் நாடுகளை விடவும் ஆண்டனி அல்பானிஸின் கருத்துக்கள் மிகவும் சத்தமாக ஒலிக்கின்றன.

ஆனால் ஆஸ்திரேலியா நேட்டோவில் உறுப்பு நாடு இல்லையா என்பது குறித்து ஆராய நிதி, இராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை கொண்டு ஆராய வேண்டியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா மீது ஆஸ்திரேலியா விதித்துள்ள பொருளாதார தடை மற்றும் அகதிகள் மீதான நடவடிக்கைகள் குறித்த தரவுகள் உடனடியாக கிடைக்கவில்லை. அதனால் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த முடியவில்லை.

Australia on the NATO list, What is the truthஎனினும் கிடைத்துள்ள ஆராய நிதி, இராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை மையமாக வைத்து யூரோவில் மதிப்பீடு செய்தால், நேட்டோ அல்லாத நன்கொடையாளர் நாடுகளுக்கான வரிசையில் ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 14 நாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மீதான பொருளாதார தடை மற்றும் மனிதாபிமான உதவிகளை ஆஸ்திரேலியா செய்து வருவதால், அதை நேட்டோவில் இடம்பெற்றுள்ள நாடாக கருதலாம் என்று சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கர்னா கிரையக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழக பாதுகாப்புத் துறை பேராசிரியர் மேத்யூ சஸ்செக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா செய்யும் எந்த உதவியும் உக்ரைனை நேரடியாக சென்று அடைவதில்லை. அதனால் அதை நேட்டோவில் இடம்பெறாதா நாடு என்று கூறுவது சரியே என்று கூறியுள்ளார்.

நேட்டோ அல்லாத நாடுகளில் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு தீவிரமாக ஆதரவை வழங்கி வருவதாக பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் உறுதியாக கூறினார். தற்போது ஐரோப்பிய நாடுகள், துருக்கி, ஐக்கிய ஒன்றியம், கனடா மற்றும் அமெரிக்கா உட்பட 30 நாடுகள் நேட்டோவில் அங்கம் வகிக்கின்றன. இவை அனைத்துமே உக்ரைனில் ஏற்பட்டுள்ள ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு கூறி வருகின்றன.

அதே சமயத்தில் நேட்டோவில் இடம்பெறாத நாடுகளாக அடையாளப்படுத்தப்படும் ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, சீனா, சைப்ரஸ், ஃபின்லாந்து, இந்தியா, அயர்லாந்து, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யா போருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.