Breaking News

சாலமன் தீவுகளில் சீனா நாட்டைச் சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதை அடுத்து, அதை ஆஸ்திரேலியா உன்னிப்பாக கவனிக்க துவங்கியுள்ளது.

Australia has begun to pay close attention to Chinese security forces in the Solomon Islands.

பசிப்பிக்கில் அமைந்துள்ள சாலமன் தீவு நாடு, சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க சீனா வழங்கிய உதவியை ஏற்றுக்கொண்டது. அதையடுத்து சாலமன் தீவுகளுக்கு வந்தடைந்துள்ள சீனா காவல்துறை அதிகாரிகள், அதற்குரிய பணிகளை துவங்கியுள்ளனர்.

Australia has begun to pay close attention to Chinese security forces in the Solomon Islands..இந்த காவல்துறையினர் குழுவில் 9 சீனா காவலர்கள் இடம்பெர்றுள்ளனர். இவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கையை தடுக்க உதவும் வகையிலான பயிற்சிகளை வழங்குவர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா தூதரக அதிகாரிகள் சாலமன் தீவுகளில் இருந்து சீனா காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சாலமன் தீவுகள் நாடுகளுக்கு சீனா ராணுவ உதவிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை ஆஸ்திரேலிய அரசு, நாட்டின் பாதுகாப்பு எதிரான முக்கிய பிரச்னையாக கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Link Source: https://ab.co/3JQpmL3