Breaking News

தீவிரவாதம், சைபர் குற்றங்களை தடுக்க இந்தோனேசியா உடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா ஒப்புதல் : ஜகார்தாவில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு

Australia agrees to work with Indonesia on counter-terrorism, cybercrime. High-level panel meeting in Jakarta

இரண்டு வாரங்கள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியாவுக்கு சென்றிருந்த ஆத்திரேலியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் Marise Payne, இது தொடர்பான உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். தொற்று பரவல் முடக்க நிலைக்கு பிறகு இரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Australia agrees to work with Indonesia on counter-terrorism, cybercrime,. High-level panel meeting in Jakartaஇரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதோடு சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்வது குறித்தும் முடிவு எட்டப்பட்டுள்ளன.

அமைதியும் வளமும் இரு நாடுகளிலும் எப்போதும் தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் பரஸ்பரம் இரு நாடுகளும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று இந்தோனசியா பாதுகாப்பு துறை அமைச்சர் Dutton கூறியுள்ளார்.

Australia agrees to work with Indonesia on counter-terrorism, cybercrime, High-level panel meeting in Jakarta.Canberra வில் உள்ள Durntoon ராணுவப் படைத் தளத்தில் இந்த தேசிய படை வீரர்கள் விரைவில் பயிற்சி பெற உள்ளதாகவும் அதற்கான திட்டங்கள் இந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இருநாட்டு பாதுகாப்பு துறையின் வளம் மேம்படும் என்றும், எதிரிகளை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதில் ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தோனேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் Dutton தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3k3FyPe