Breaking News

ஆஸ்திரேலியாவில் நன்னடைத்தை அடிப்படையில் விசாவை நிராகரித்து நாடு கடத்துவதற்கான சட்டத்திருத்தம் : அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவுக்கு கீழ் சபை அனுமதி

ஆஸ்திரேலியாவின் குடிவரவுச் சட்டத்தின் படி நன்னடத்தை பரிசோதனையின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து அவர்களை நாடுகடத்துவதற்கு ஏதுவான சட்டத்திருத்தம் ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது.

இந்நிலையில் சட்டமுன் வடிவு தொடர்பாக அரசு முடிவெடுக்க அதிகாரம் வழங்கும் வகையில் கீழ் சபை அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து செனட் சபைக்கு சட்ட முன்வடிவு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

குடிவரவுச் சட்டத்தின் பிரிவுகளின் படி அரசு முன்மொழியும் திருத்தத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாத ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெரும் வகையில் குற்றச் செயல் புரிந்திருந்தால் அல்லது 12 மாதங்கள் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நபர் என கருதி அவரது விசாவை ரத்து செய்த நாடு கடத்த முடியும்.

எனவே இது போன்ற விவகாரங்களில் பலரை நாடு கடத்துவதற்கு அரசுக்கு கூடுதல் அதிகாரம் தேவைப்படுவதால் இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்வதாக குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke கூறியுள்ளார்.

Australia Abolition of Probationary Visa Rejection Act. Council Permission Under the Bill to Power the State.குடிவரவு சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதற்கு தொழிலாளர் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் சபையான கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து செனட் சபைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக Migration Amendment Bilட கொண்டு வரப்பட்ட போது தொழிலாளர் கட்சி மற்றும் கிரீன்ஸ் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டத் திருத்தம் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஒருமித்த கருத்துடன் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது அமலுக்கு வரும் பட்சத்தில் ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகவும் முக்கியமான சட்டமாக கருதப்படும் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும்கூறப்படுகிறது.

Link Source: https://bit.ly/34KKbZE