Breaking News

கடல் உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாத ஆஸ்திரேலியர்கள்- கவலையில் சமையலர்கள்..!!

ஆஸ்திரேலியாவின் கடல்பரப்பில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் வகைகள் இருக்கையில், அதில் வெறும் குறைவான வகை மீன்களை மட்டுமே நாம் உணவாக சாப்பிடுவது ஏன்? என்கிற கேள்வியை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

Aussies not interested in eating seafood- cook worried

மீன்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் பேட்ரிக் ஹான், ஆஸ்திரேலியர்களின் கடல் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி விலை உயர்ந்த மீன்களை ஆர்வமாக வாங்கும் ஆஸ்திரேலியர்கள், அதனுடைய சதை பகுதியை மட்டுமே உணவாக சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு மீன்களின் தலையும் வால் பகுதியும் குப்பைக்கு செல்வது வேதனை அளிப்பதாக கூறுகிறார்.

Aussies not interested in eating seafood- cook worried,ஆஸ்திரேலியாவில் ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிகளை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஆண்டுதோறும் குறிப்பிட்ட அசைவ உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் கடல் உணவுகளை சாப்பிடுவதில் ஆஸ்திரேலியர்கள் சுணக்கம் காட்டுவதாக மீன்வள ஆராய்ச்சி நிர்வாக இயக்குநர் பேட்ரிக் ஹான் கூறியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவிலுள்ள பிரபல சமையலர்கள், ஆஸ்திரேலியர்கள் கடல் உணவுகளை சாப்பிடுவதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு பிரபல சமையலர்களும் மீன்களை எப்படி சமைப்பது, எந்த பகுதிகளை சாப்பிடுவது என்பன குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய பெண் சமையர் நியூஜென், மக்களுக்கு கடல் உணவுகளின் தோற்றம் அச்சத்தை தருகிறது. அதனாலேயே கடல் உணவுகளை சமைப்பது மற்றும் சாப்பிடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, இந்த பரப்புரைகளை மக்களிடையே எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.