Breaking News

சன்ஷைன் கடற்கரை பகுதியில் நடைபெற்ற தகராறு ஒன்றில் சக குடியிருப்பு வாசியை கொளுத்த முயன்ற விவகாரம் : சம்பவத்தில் தொடர்புடைய ஆண், பெண் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

Attempt to burn a fellow resident to death in a dispute over the Sunshine Beach. Police have arrested two men and a woman involved in the incident and are conducting an intensive investigation.

ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடற்கரை பகுதியான சன்ஷைன் குடியிருப்பில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இடையே ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஒருவரை கொளுத்த முயன்ற விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

37 வயதான ஆண் மற்றும் 27 வயதான பெண் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Buderim பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் காரை ரிவர்ஸ் எடுக்கையில் மற்றொரு நபரின் கார் மீது இடித்து விட்டதாகவும் இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக சம்பந்தப்பட்ட நபரை தீயிட்டுக் கொளுத்தும் வகையில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள புலனாய்வு காவல் அதிகாரி Craig Mansfield கூறியுள்ளார்.

Attempt to burn a fellow resident to death in a dispute over the Sunshine Beach. Police have arrested two men and a woman involved in the incident and are conducting an intensive investigation..குறிப்பிட்ட நபருடன் வந்த பெண் ஒருவரும் 500 மீட்டர் தொலைவில் கார் மீது பொருட்களை வீசி எறிந்த தாகவும், பாதிக்கப்பட்ட நபர் நண்பர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் இருவரும் தவறான பாதையில் காரை செலுத்திக் கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. நேரத்தில் இருவரையும் பிடிப்பதற்காக மாற்றுப்பாதையில் மற்றொரு 37 வயதான ஆண் தனது காரை செலுத்திக் கொண்டு சென்றதாகவும் ஆனால் அவர்கள் அதற்குள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட ஆண் பெண் இருவருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும் அதே நேரத்தில் காவல்துறையினர் அவர்களை தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர். இதுபோன்ற கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்திற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு காவல் அதிகாரி Craig Mansfield தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் இருந்து உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடிப்படையில் பெருமளவிலான விபத்து மற்றும் தாக்குதல் தவிர்க்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3ImzzOC