Breaking News

தைவானில் நிலவும் அமைதியற்ற சூழலை தணிக்கும் முயற்சி : ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott தைவான் பயணம்

தைவான் எல்லைக்குள் சீனப் போர் விமானங்கள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott தைவான் சென்றுள்ளார். அங்கு சர்வதேச அமர்வில் உரையாற்ற உள்ள அவர், சீனா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் Yushan Forum நிகழ்வில் பங்கேற்பதற்காக தைவான் வந்த ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் Tony Abbott-ஐ தைவான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வரவேற்றார். இதே நிகழ்வில் கடந்த ஆண்டு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முன்னாள் பிரதமர் Malcolm Turnbull கலந்து கொண்டு உரையாற்றினார்.

Attempt to alleviate unrest in Taiwan. Former Australian Prime Minister Tony Abbott visits Taiwan.தைவான் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தைவானில் உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், சீனாவை எதிர்க்கும் நிலைப்பாட்டுடன் உள்ள நாடுகளோடு இணைந்து செயல்பட விருப்பதாகவும் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Tien Chung-kwang தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் Tony Abbott அரசுமுறை பயணமாக இந்த பொதுமன்ற நிகழ்வில் பங்கேற்க வந்திருப்பதாகவும், அவர் தைவானுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்து ஆற்ற உள்ள உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இரு தலைவர்களும் விமான நிலையத்தில் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் பயணம் அதிகாரப்பூர்வமான அரசு முறை பயணம் அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தைவான் சீனா இடையிலான பிரச்சனையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸகாட் மோரிசனின் நிலைப்பாடு மாறாக இருப்பதாக கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3lktg5E