உள்துறை அமைச்சக செயலாளர் மைக்கேல் பெஸ்ஸூல்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்தல் நடந்த நாளில் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் புகலிடக் கோரிக்கையாளர் படகு உள்நுழைய முயற்சித்துள்ளது. அதை தெரிந்துகொண்ட அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரீசன் பிரச்னையை பெரிதாக முயன்றுள்ளார்.
அதற்காக கடல் எல்லை படைக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் வந்தனர் என்பதை எல்லைப் படை அறிவிக்க பிரதமர் அலுவலகம் வற்புறுத்தியுள்ளது. ஆனால் எல்லைப் படையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் கிரேல் ஓநையில், தேசிய நலனுக்கு மேலாக அரசியல் நலன்களை மட்டுமே பின்பற்றும் தேசிய அரசாங்கத்தின் அவமானகரமான, வெட்கக்கேடான பண்பு என்று விமர்சித்துள்ளார்.