Breaking News

ஆஸ்திரேலியாவில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக அஸ்ட்ராசெனகா செலுத்தலாம் : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத் துறை

லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருவதன் காரணமாக 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு இரண்டாவது டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட 52 வயதான பெண் ஒருவர் ரத்தம் உறைதல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் 50 முதல் 59 வயதுடையவர்கள் தடுப்பூசி போடாவிட்டால் அவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல் டோஸ் தடுப்பு ஊசி அஸ்ட்ராசெனகா எடுத்திருந்தால் அவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று 60 வயது மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Australian Technical Advisory Group on Immunisation (ATAGI) சுகாதாரத்துறையின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பு ஊசி அஸ்ட்ராசெனகா எடுத்திருந்தால் அதே தடுப்பூசியை இரண்டாவதாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்தவித பிரச்சினையும் இல்லாதவர்கள் தாராளமாக இரண்டாவது டோசை உடனடியாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் தலைமை சுகாதாரத்துறை அதிகாரி Paul Kelly கூறியுள்ளார்.

AstraZeneca can be given as a second dose vaccine to people under the age of 60 in Australia,அதே நேரத்தில் தடுப்பூசிகளை மாற்றி எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், முதல் டோஸ் ஃபைசர் எடுத்துக் கொண்டவர்கள் இரண்டாவது செய்யும் அதே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகளையும் மாற்றி எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தலைமை சுகாதார அதிகாரி Paul Kelly தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 3.8 மில்லியன் பேர் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அதில் இரண்டு பேர் தீவிர இரத்தம் உறைதல் பிரச்சினை காரணமாக உயிரிழந்து விட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இளம் வயதினர் இடமும் குறைந்தபட்ச ரத்தம் உறைதல் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு இனிவரும் நாட்களில் சரி செய்யப்படும் என்றும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளும் நபர்களின் கணக்கீட்டின் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2TMG3CA