Breaking News

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி Sir David Amess கொலை செய்யப்பட்ட விவகாரம் : பிரிட்டன் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் ஒருவரை கைது செய்தது காவல்துறை

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்பி Sir David Amess. தனது தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென உள்ளே புகுந்த நபர் ஒருவர் எம்பி-யை கத்தியால் குத்தியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

69 வயதான Sir David Amess கடந்த ஏழு முறை South End West தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்ட 25 வயதான நபர் Ali Harbi Ali என்பதும் இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆகவே இருந்தாலும் தன்னை சோமாலிய பாரம்பரியத்துடன் இணைத்துக் கொண்டவராகவும் அடிப்படைவாதம் மற்றும் கொள்கை கோட்பாடுகளுடன் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நபராக அரிய படுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Assassination of Britain's ruling Conservative MP Sir David Amess. Police arrest one under British counterterrorism operationஇதனிடையே கைது செய்யப்பட்ட நபர் மீது பிரிட்டன் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட Ali Harbi Ali தாம் ஒரு இஸ்லாமிய நாட்டு பிரஜை என்றும், எம்பியை கொள்வதற்கு பல ஆண்டுகளாக திட்டமிட்டு நான் இங்கே தங்கி இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் இத்தனை ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்து கொலைக்கு திட்டமிட்டார் அவரோடு தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்பி Jo Cox துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு எம்பி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது பிரிட்டனில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3DWgvoe