Breaking News

ஆசிய – ஆஸ்திரேலியர்களின் லூனார் புத்தாண்டு கொண்டாட்டம் : கொரொனா கட்டுப்பாடுகளால் களையிழந்த கொண்டாட்டம்

Asian - Australians' Lunar New Year Celebration. Weeded by Corona Restrictions

வியட்நாமில் லூனார் எனப்படும் சந்திரமுறைப் புத்தாண்டு சற்று அமைதியான வகையில் கொண்டாடப்ப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றுச் சூழலில் போருக்குப் பிறகு அந்நாடு ஆக அதிகமான மரணங்களைச் சந்தித்துள்ளது. COVID-19 காரணமாகக் கொண்டாட்டங்களுக்குச் செலவு செய்வதும் குறைந்துள்ளது.

Asian - Australians' Lunar New Year Celebration. Weeded by Corona Restrictions.வியட்நாமை சேர்ந்தவர்கள் சிட்னியில் தற்போது லூனார் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர் பெருமளவு குடும்பத்துடன் ஒன்றுகூடல் நிகழ்வு களை நடத்தாமல் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கும் வேளையில் மலர்ச் சந்தைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. வீட்டை அலங்கரிக்கவும் முன்னோர் வழிபாட்டுக்காகவும் Kumquat செடிகளையும் Peach மலர்களையும் மக்கள் வாங்குகின்றனர். எனினும் இந்த ஆண்டு வியாபாரம் மந்தம் என்கின்றனர் கடைக்காரர்கள். COVID-19 வியட்நாமின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ள நிலையில் மக்கள் செலவுசெய்வது குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட 5 மில்லியன் வியட்நாமியர்கள் வேலைகளை இழந்துவிட்டனர். புதிய ஆண்டில் புதிய இயல்பு நிலைக்குப் பழகிக்கொள்ள நாடு முயன்று வருகிறது. புத்தாண்டின்போது பெரிய ஒன்றுகூடல்களுக்கு அனுமதியில்லை. எனினும் பயணங்கள் அதிகரித்துள்ள நிலையில் குடும்ப ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ள மக்கள் ஆர்வமாய் இருக்கின்றனர்.

Asian - Australians' Lunar New Year Celebration. Weeded by Corona Restrictions,ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஏராளமான மக்கள் சர்வதேச எல்லை திறக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் குடும்பத்துடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர் மேலும் சிங்கத்தின் மீதான சீன புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை கொண்டு வந்திருப்பதாகவும் இனிவரும் காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இருப்பதாகவும் புத்தாண்டு செய்தியாக பரிமாறிக் கொள்கின்றனர்.

Canberra வில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் உள்ளூர் நண்பர்கள் மற்றும் சொந்த நாட்டினரோடு இணைந்து விருந்து உண்டு லூனார் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்தகால பசுமையான நிகழ்வுகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர் இனி வரும் ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடக்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்தனர்.

Link Source: https://ab.co/3gh9fcJ