Breaking News

தேசிய விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 1.16 பில்லியன் டாலர் மதிப்பில் 4 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன.

As part of the national space mission, four satellites will be designed, built and operated from Australia at a cost of $ 1.16 billion.

விண்வெளிக்கான முதல் திட்டமாக இதை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன்மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், ஆரம்பக்கட்ட பணிகளில் மட்டும் உள்ளூரைச் சேர்ந்த 1000 நிறுவனங்கள் பணியாற்றும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

As part of the national space mission, four satellites will be designed, built and operated from Australia at a cost of $ 1.16 billion..இந்த திட்டத்தின் வாயிலாக ஆஸ்திரேலியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவது முதல் நோக்கமாக உள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள், பேரிடர் போன்றவை முன்கூட்டிய கணிக்கப்படும். தரவுகளை நம்பி பணியாற்றும் விவசாயம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளுக்கு இது பேருதவியாக அமையும் என்று எண்ணப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் விண்வெளி அமைப்பு, ஜியோசையின்ஸ் ஆஸ்திரேலியாவுடன் கைக்கோர்த்து இந்த திட்டத்தை கையாளும். இதற்காக ஆண்டுதோறு 39 அமெரிக்க டாலர்கள் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஆஸ்திரேலியாவில் ராக்கெட் ஏவுதலை உருவாக்குவதற்கும், விண்வெளிக்கு தேவையானவற்றை விரைவாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3NPK8gT