Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 30 பேர் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

As corona infections have been on the decline in the state of New South Wales for the past one week, the shocking death of 30 people infected with the Covid-19 virus in a single day has come as a shock.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அரசு அறிவித்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

As corona infections have been on the decline in the state of New South Wales for the past one week, the shocking death of 30 people infected with the Covid-19 virus in a single day has come as a shock..தற்போது அந்த மாநிலத்தில் 2,749 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களில் 183 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 70 பேர் உயிர் காக்கும் உபகரணங்களுடனும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து கொரோனாவுக்காக சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 30 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வயது 30 தான் ஆகிறது. அந்த நபர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல அறுவை சிகிச்சை வேண்டுபவர்களை தவிர, மற்ற பாதிப்புக் கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் பிராட் ஹசார்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Link Source: https://ab.co/3gdbU74