ஆனால் மாகாணங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ளும் போது இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அறிந்துக்கொள்வது, கடைசி நேரத்தில் ஏற்படும் சங்கடத்தை தவிர்க்கவும், முன்கூட்டியே பயண திட்டத்தை மேற்கொள்ளவும் உதவும். அந்த வகையில் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணதிற்கு செல்லும் போது இருக்கும் கட்டுப்பாடுகளை தற்போது பார்க்கலாம்.
விக்டோரியாவில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு செல்ல 16 வயதை கடந்த அனைவரும் இரண்டும் டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றவர்களும், கொரோனா பாதிகப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் கழித்த பிறகே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால், 7 நாட்களுக்கு பிறகு அவர்கள் மாகாணத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். மறுமார்கமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து விக்டோரியாவிற்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் இருந்து குயின்ஸ்லாந்து பயணம் செய்பவர்களுக்கு, நுழைவுச் சீட்டு அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் சாலை,வான் மார்கமாக மாகாணத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாகாணத்திற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் எடுக்கப்பட்ட கொரோனோ நெகட்டீவ் சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்திற்குள் நுழைந்த 5 நாட்களுக்கு பிறகு கோவிட் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மறு மார்கமாக, குயின்ஸ்லாந்தில் இருந்து விக்டோரியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
அதே போல விக்டோரியாவில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் பிப்ரவரி 5 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி விக்டோரியாவில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியா வருபவர்கள், நுழைவு அனுமதி சீட்டு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களும், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதி வழங்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு அனுதாபத்தின் அடிப்படையில் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல்வாரத்திலோ மற்ற மாகாண பயணிகளுக்கு அனுமதி வழங்க மேற்கு ஆஸ்திரேலிய முடிவு செய்துள்ள நிலையில் , அவ்வாறு வருபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டீவு சான்று அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து விக்டோரியாவிற்கு வருவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை.
விக்டோரியாவில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா செல்பவர்கள், நுழைவு அனுமதி பெற வேண்டியது கட்டாயம். இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியிருப்பது கட்டாயம். 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டீவ் சான்று அவசியம். விமானத்தில் வரும் பயணிகள், மாகாணத்திற்குள் வந்த பிறகு விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மாகாணத்திற்குள் நுழைந்த 6வது நாளில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ல வேண்டும்.
அரசு கண்காணிப்பு செயலியில் தினசரி தங்களின் உடல் நிலை குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
விக்டோரியாவில் இருந்து தாஸ்மானியா வருபவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை முன் நுழைவு அனுமதி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு மாகாணத்திற்கு வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனோ நெகட்டீவ் சான்று அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் இருந்து ஏசிடி பகுதியிக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் மாறுபடுகின்றன. அதாவது மெல்போர்ன் நகர்புறம், சில புற நகர் பகுதிகள் மற்றும் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் முன் நுழைவு அனுமதி பெறவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பட்சத்தில், அவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பொதுஇடங்களில் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் இருந்து வடக்கு பிராந்திய பகுதிக்கு செல்பவர்கள் இரண்டு கட்டங்களாக கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். டிசம்பர் 20 வரை இந்த பகுதிக்குள் நுழைய முன் அனுமதி கட்டாயம். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டீவ் சான்று அவசியம்.
வருகைக்கு பிறகு பரிசோதனை கட்டாயம். தனிமைப்படுத்தும் காலத்தில், 5,8,14 ஆகிய நாட்களில் கோவிட் பரிசோதனை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதிக்கு பிறகு விக்டோரியாவில் இருந்து வடக்கு பிராந்திய பகுதிக்குள் நுழைய முன் நுழைவு அனுமதி கட்டாயம்.
16 வயதை கடந்தவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டீவ் சான்று அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்திற்குள் நுழைந்த 72 மணி நேரத்திற்குள்ளாகவும், 6 நாட்கள் கழித்தும் கோவிட் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் வரை கிரேட்டர் டார்வின், கேத்தரீன், ஆலீஸ் ஸ்பிரிங் போன்ற பகுதிகளிலேயே இருக்க வேண்டும் என்றும், காக்கடு, லிட்ச்பீல்ட், உலூரு போன்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கண்காணிப்பு செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற மாகாணத்தில் இருந்து விக்டோரியாவிற்குள் நுழைய முன் அனுமதி தேவையில்லை.
Link Source: https://bit.ly/3ymj7KB