Breaking News

இந்தியாவில் கொரோனாவால் சுமார் 50 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Arvind Subramanian, India's former chief economic advisor, has said that up to 50 lakh people could have died from corona in India.

அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவித்தாலும், கூடுதலாக 49 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Arvind Subramanian, India's former chief economic advisor, has said that up to 50 lakh people could have died from corona in Indiaஇது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் வழக்கமாக இந்தியாவில் ஒரு ஆண்டில் ஏற்படும் உயிரிழப்பு புள்ளி விபரங்களுடன், கொரோனா காலத்தில் பதிவான உயிரிழப்பு புள்ளி விபரங்களை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பார்க்கையில், இந்தியாவில் கொரோனா காலத்தில், அதிகபட்சம் 49 லட்சம் கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, 2020 ஜனவரி யில் இருந்து, 2021 ஜூன் வரையிலான காலத்தில், வழக்கமான ஆண்டுகளைவிட, 34 லட்சம் முதல், 49 லட்சம் கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த கூடுதல் உயிர்இழப்புகள் அனைத்துமே கொரோனாவால் ஏற்பட்டவை என்று கூற உறுதியாக
கூறமுடியாவிட்டாலும், கொரோனா பலி எண்ணிக்கை முறையாக கணக்கிடப்படவில்லை என்பதை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3hY7H98