Breaking News

உக்ரைனுக்கு வழங்குவதற்காக ஆயுதம் தாங்கிய வாகனங்கள் தயார் : இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்படுவதற்கு தயாராக நிற்கும் Bush Master ரக வாகனங்கள்

Armored vehicles ready to be delivered to Ukraine. Bush Master vehicles ready to depart from Australia in a few days

உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகளின் ராணுவ உதவிகளை அதிபர் செலன்ஸ்கி கோரி வந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ தளவாடங்கள் மற்றும் துருப்புகளை அனுப்பி உதவிகளை செய்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து Bushmaster ஆயுதம் தாங்கி வாகனங்கள் வர்ணம் பூசப்பட்டு புறப்படுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில தினங்களில் அவை உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றத்தில் காணொளி வாயிலாக உரையாற்றி வரும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அந்த நாடுகளோடு தொடர்புடைய மிக மோசமான பாதிப்புகளை நினைவுகூர்ந்து அதைவிட மோசமாக உக்ரைன் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து விதங்களிலும் உக்ரைனுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் ராணுவ தளவாடங்களை ஆஸ்திரேலியா வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் மக்களை காப்பாற்றுவதற்கு தங்களோடு கைகோர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Armored vehicles ready to be delivered to Ukraine. Bush Master vehicles ready to depart from Australia in a few days.ஆஸ்திரேலியாவின் RAAF ராணுவத் தளத்திலிருந்து 4 ஆயுதம் தாங்கி வாகனங்கள் பழுது நீக்கப்பட்ட வண்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், பிரிஸ்பேனில் இருந்து C17 Globemaster ராணுவ விமானங்கள் மூலமாக அவை உக்ரைன் கொண்டுசெல்லப்படும் என்றும் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. Bushmaster ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஆப்கானிஸ்தான் போரின் போது ஆஸ்திரேலிய வீரர்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப் பட்டது என்றும், டச்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வகை வாகனங்கள் மிகவும் பயன்படக் கூடியவை என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உக்ரைனுக்கு தங்கள் வேண்டுதல்கள் மட்டுமல்லாமல் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவருடனான உரையாடலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது தளவாட வாகனங்கள் அனுப்பப்படுவதாக மேலும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதனை செய்வதற்கு ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் Marise Payne பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெறக்கூடிய இந்த நேட்டோ உச்சிமாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிபர் செலன்ஸ்கி-க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த மாநாட்டில் போர் விவகாரம் மிகப்பெரும் பேசு பொருளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேட்டோ உறுப்பு நாடுகளாக அல்லாத தென்கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நியாயமற்ற அணுகு முறைக்கு எதிராக உக்ரைனுக்கு அனைத்து வழிகளிலும் ஆஸ்திரேலியா துணை நிற்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3706BXE