Breaking News

AOC போன்ற ஒருவர் ஆஸ்திரேலியாவில் உருவாக வாய்ப்பில்லை !

2018-ஆம் ஆண்டின் இடைக்காலத்தில் “The Squad” என்ற பெயரில் நான்கு கருப்பின அரசியல் புதுமுகங்கள் Alexandria Ocasio-Cortex-(AOC)-ன் தலைமையில் ஒரு சக்திவாய்ந்த Democrats-ல் ஒருவரை பதிவியை விட்டு நீக்கச் செய்தனர்.

இந்த ஆண்டு கருப்பினத்தை சேர்ந்த கல்வியாளர் Jamaal Bowman, ஓரின சேர்க்கையாளர் 33 வயதான வழக்கறிஞர் Mondaire Jones மற்றும் Black Lives Matter ஆர்வலர் மற்றும் செவிலியர் Cori Bush காங்கிரஸில் ஒரு இடத்தை வென்றனர்.

ஆஸ்திரேலியாவின் அரசியல் அமைப்பை பொறுத்தவரை AOC போன்ற அணி உருவாகும் வாய்புகள் குறைவு என்று Dr Shortis தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் வெவ்வேறு அரசியல் கட்டமைப்பு மற்றும் வாக்களிக்கும் முறைகளைக் கொண்டுள்ளன.வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் மாறுபடும்.

அமெரிக்காவின் அரசியல் பிரச்சாரங்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவை விட வேகமாகவும் எளிதாகவும் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் பரவலாக இயங்குவதற்கான மற்றொரு காரணம் ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது அமேரிக்காவில் ஒரு வித அவசர மனப்பான்மை இருப்பதுவே என்று Dr Shortis தெரிவித்தார்.

Black Summer Bushfires மற்றும் காவல் நிலைய மரணங்களுக்கு எதிரான பேரணிகளின்போது இளைஞர்கள் அதிகமாக அணி திரண்டதாக Dr Shortis தெரிவித்தார். இந்த ஆற்றலை பிரச்சாரங்களுக்கு மடைமாற்ற இன்னும் சிறிது காலம் ஆகலாம்.

கருப்பின மக்கள், பெண்கள், அரசியலில் நுழைவதில் ட்ரம்ப் அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலை கழகத்தின் அறிவியல் விரிவுரையாளர் Blair Williams ஒப்புக்கொள்கிறார்.ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு ஸ்காட் மோரிசனின் அக்கறையின்மையை காரணம் என அவர் தெரிவித்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் பன்முகத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் பரந்த மக்களின் பிரதிநிதியாக இல்லை என்றும் Dr Williams தெரிவித்தார்.

நியுசிலாந்து கடந்த மாதம் மிகவும் மாறுபட்ட நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுத்தது. பாராளுமன்றத்தில் பெண்கள் இப்போது பாதிக்கு மேல் உள்ளனர்.10 சதவீதம் LGBTQI + என அறியப்படுகிறது.

Prime Minister Jacinda Ardern-ன் புதிய அமைச்சரவையில் எட்டு பெண்கள் உள்ளனர்.அவர்களில் ஐந்து பேர் Maori, மூன்று Pasifica மற்றும் மூன்று LGTBQI + உள்ளனர்.அனைவரும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.