Breaking News

கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆன்டிவைரல் Molnupiravir மாத்திரைகள் : 3 லட்சம் மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு

Antiviral Molnupiravir Tablets Act Against Corona. Australian Government Orders 3 Lakh Tablets

கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் மாத்திரையான Molnupiravir ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Merck Sharp & Dohme – விடம் 3 லட்சம் Molnupiravir மாத்திரைகளை ஆஸ்திரேலிய அரசு ஆர்டர் செய்துள்ளது.

Antiviral Molnupiravir Tablets Act Against Coronaதடுப்பூசியாடு இணைந்து இது போன்ற மருந்துகளும் தேசிய அளவிலான பாதுகாப்பு திட்டங்களை பலப்படுத்தும் என்றும், விரைவில் பாதுகாப்பான முறையில் ஆஸ்திரேலிய எல்லைகளை திறப்பதற்கு இது நிச்சயம் உதவும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது போன்ற கூடுதல் ஆராய்ச்சிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் மூலமாக பாதுகாப்பான, உறுதியான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Antiviral Molnupiravir Tablets Act Against Corona, Australian Government Orders 3 Lakh TabletsMolnupiravir மாத்திரைகள் கொரொனா வைரசின் மிதமான அறிகுறிகள் கொண்ட நடுத்தர வயதினருக்கு முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது. மாத்திரை தொடர்பான ஆராய்ச்சியில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் 50 சதவீதம் அளவுக்கு உயிரிழப்பை தடுப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையை தவிர்ப்பதாகவும் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான TGA அனுமதி அளித்த பின்னர் 2022 ஆண்டின் முற்பகுதியில் மருந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

Sotrovimab, Remdesivir போன்ற மருந்துகள் ஏற்கனவே வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், Molnupiravir மாத்திரையை நாளொன்றுக்கு இரண்டு வேளை ஐந்து நாட்கள் உட்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மருந்தின் பயன்பாடு சரியான முறையில் இருக்கும் பட்சத்தில் நாடு முழுவதும் கிடைக்கும்படி அரசு ஏற்பாடு செய்யும் என்றும், கூடுதலாக அனைத்து உயிர் காக்கும் மருந்து களையும் வாங்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3FowfC3