ACT மாகாணத்தில் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
AIS தடுப்பூசி மையத்திற்கு முன்னதாக ஒன்றுகூடிய ஏராளமானோர் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்றனர். காவல்துறையின் அறிவிப்பின்படி பத்தாயிரம் பேர் பேரணியில் பங்கேற்று இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த பேரணியில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக போக்குவரத்துப் பாதையில் வாகனத்தை இடையூறாக நிறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கட்டாய தடுப்பூசி க்கு எதிராக பேரணியாக சென்று அவர்களுக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எக்ஸிபிஷன் பார்க் எனப்படும் பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக செல்பவர்கள் வரம்பு மீறி சென்றவர்கள் ஆக கருதப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பேரணி காரணமாக Canberra பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தக கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சம்பந்தப்பட்ட அறக்கட்டளை நிறுவனத்திற்கு அரசு தரப்பில் 25 ஆயிரம் டாலர் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. Lifeline Canberra என்ற அமைப்பு சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டதன் காரணத்தின் அடிப்படையில் பாதுகாப்பு முக்கியமானது என்றும், அது போராட்டக்காரர்களுக்கும் இங்கு வரும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களிடம் செனட்டர் Pauline Hanson பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களது உரிமைகளை பேசுவதற்கான வாய்ப்பை யாராலும் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தடுப்பூசி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் ஏற்கனவே தெரிவித்த விளக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Link Source: https://bit.ly/34x872x