ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பாக, எதிர்கட்சித் தலைவர் ஆண்டனி நார்மன் ஆல்பனீஸ் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். தற்போதைய பிரதமர் மோரீசனுக்கு முன்பாகவே பரப்புரை மேற்கொள்ள அவர் துவங்கிவிட்டார்.
எனினும், ஆண்டனி அல்பானிஸ் பரப்புரை செய்ய துவங்கியதில் இருந்தே பல்வேறு தவறான தகவல்களை தன்னுடைய உரையில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிலை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இதன்காரணமாக வாக்காளர்கள் மத்தியில் அவர் செல்வாக்கு இழந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் முன்னணி ஊடகங்கள் பல செய்தி தெரிவிக்கின்றன. இதனால் லிப்ரல் கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. அக்கட்சியின் சார்பாக தற்போது பிரதமராக இருக்கும் ஸ்காட் மோரீசன் மீண்டும் பிரதமராகக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.