Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி வரும் மற்றொரு கப்பல் ஊழியர்களுக்கும் வைரஸ் பாதிப்பு : தொற்று பாதித்தவர்களோடு கப்பலை அனுமதிக்க முடியாது என ப்ரீமியர் திட்டவட்டம்.

Another ship crew heading to Western Australia was also infected with the virus, Premier plans to ship with infected people.

கப்பலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி வரும் Darya Krishna கப்பலிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு தீவிர மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கப்பலில் பணியாற்றும் 20 பேர் கொண்ட குழுவினரில் நான்கு பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கப்பலில் பணியாற்றும் குழுவினரில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

Another ship crew heading to Western Australia was also infected with the virus. Premier plans to ship with infected people.இந்நிலையில் தற்போது கப்பலில் 20 பணியாளர்களில் நான்கு பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த கப்பலை நேரடியாக அனுமதிக்க முடியாது என்றும், வைரஸ் பாதித்தவர்களை மட்டும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும் என்றும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தாங்கள் மட்டுமே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்றும் காமன்வெல்த் நிர்வாகம் மற்றும் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திய பின்னரே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்படும் வகையிலான எந்தவித ஆபத்தையும் தாங்கள் மேற்கொள்ள தயாராக இல்லை என்றும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோற்று பாதித்தவர்களை கப்பலிலிருந்து வெளியேற்றிய பிறகு கப்பல் மேற்கு ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படும் என்றும் ப்ரீமியர் Mark McGowan திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2TB0PVX