Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக முதல்வர் கிளாடி பெரிஜாக்கிளியான் தெரிவித்துள்ளார்.

Another person in New South Wales has been diagnosed with goiter

தொற்று பரவல் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவிட் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாகவும் பிரிமீயர் கூறியுள்ளார்.

Another person in New South Wales has been diagnosed with goiter, Chief Minister Claude Perijakillian has said தொற்று பரவலை கட்டுப்படுத்த டிவீட், பைரோன், லிஸ்மோர் போன்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்படுள்ளது. பொதுப் போக்குவரத்து உட்பட டேக்ஸி போன்ற வாகனங்களில் பயணிக்கும் போது முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் 4 அடி இடைவெளி கட்டாயமாக பின்பற்றப்படுவதுடன் முதியோர் இல்லங்களில் நாள் ஒன்றுக்கு 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று தொடங்கவிருந்த புளு பீஸ்ட் இசை திருவிழா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் Hazard தெரிவித்துள்ளார். வணிக வளாகங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கூடுதல் கவனத்துடன் கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.