Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பூர்வக்குடி நபர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு நியூ சவுத் வேல்ஸ், டுப்போ பகுதியை சேர்ந்த 60 வயதான பூர்வக்குடி நபர் ஒருவர் ராயல் பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனையில் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவருக்கு இணை நோய்கள் இருந்ததாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரி மருத்துவர் Marianne Gale தெரிவித்துள்ளார்.

Another aboriginal person has died of delta-type corona infection in the state of New South Wales.
கொரோனாவால் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு டுப்போ எம்.பி டுகலாட் சாண்டர்ஸ் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் டுப்போ பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1480 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொற்றால் பாதிக்கப்படுவர்களில் 60% பேர் பூர்வக்குடியை சேர்ந்தவர்கள் என்றும், அதில் 85 % 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2800 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டாலும் மக்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Another aboriginal person has died of delta-type corona infection in the state of New South Wales..இதனிடையே கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாத நூற்றுக்குக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விsதிக்கப்பட்டதாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 15 பேர் முகக்கவசம் அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களையும், தங்களின் குடும்பத்தையும் பாதுகாப்பதில் முகக்கவசம் மிக அவசியம் என்றும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/2YOqH2P