Breaking News

விக்டோரியாவில் சமூக பரவல் மூலமாக மேலும் 950 பேருக்கு வைரஸ் பாதிப்பு : 7 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

Another 950 people infected with the virus through social outbreaks in Victoria, 7 dead, some relaxation restrictions announced

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் முறையை 90,80,70, 50 வயதை சேர்ந்தவர்கள் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒருநாளில் பதிவான உச்சபட்ச எண்ணிக்கையாக 950 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அக்டோபர் மாதத்தின் இறுதியில் உச்சபட்ச நிலையை எட்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் பெரும்பாலான நபர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கும் அளவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை வாசல்களில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Another 950 people infected with the virus through social outbreaks in Victoria. 7 dead, some relaxation restrictions announcedமிக மோசமாக உடல்நிலை பாதிப்பு அதை தவிர்க்கவும், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மாகாணம் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் விக்டோரியா மாகாணத்தில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மக்கள் மீறியதே தொற்றுப் பரவல் அதிகரிக்க காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே ஒரு சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது விக்டோரியாவில் இருந்து Melbourne மற்றும் Mitchell Shire பகுதிகளுக்கு செல்வதற்கான 10 முதல் 15 கிலோ மீட்டர் வரையிலான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

தொற்று பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அந்தந்த பகுதிகளில் உள்ள தடுப்பு மையங்களுக்கு சென்று உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Link Source: https://ab.co/3olngvb