கிரேட்டர் சிட்னியில் அறிவிக்கப்பட்டுள்ள தொடக்கநிலை ஜூலை 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் தொடர் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அது மேலும் நான்கு வாரங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ப்ரீமியர் Gladys Berejiklian புதன்கிழமை என்று அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 172 பேரில் 84 பேர் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும், 60 பேர் தொற்று பரவல் அறிகுறிகளுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Black town -ல் உள்ள Daviett St ல் ஒரு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தில் 100 பேர் வரை வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு அந்த கட்டிட பகுதிக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 169 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 49 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதாகவும் பிரிமியர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் இருப்பவர்கள் மூலமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு 80 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரிமியர் இரங்கல் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருப்பவர்கள் மூலமாகவே தொற்று பரவ அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான AstraZeneca கோவிட் தடுப்பூசியை மேற்கு மேற்கு சிட்னியின் Merrylands மற்றும் Guilford-இலுள்ள walk-in கிளினிக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் AstraZeneca கோவிட் தடுப்பூசியை pharmacists ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும் என Premier Gladys Berejiklian அறிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும், இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் தேவையின்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் ப்ரீமியர் Gladys Berejiklian கோரிக்கைவிடுத்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 84 ஆயிரத்து 468 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Link Source: shorturl.at/fmpLZ