Breaking News

விக்டோரியாவில் மேலும் ஆயிரத்து 1,419 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு : ஒமைக்ரான் திரிபு வகை வைரஸ் பரவியிருக்கும் என்பதில் ஆச்சயரிமில்லை என ப்ரீமியர் கருத்து

ஆஸ்திரேலியாவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாகாணங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் அது புதிய வகை வைரஸ் பாதிப்பா என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் விக்டோரியா மாகாணத்தில் புதிதாக 1149 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர்.

அதேநேரத்தில் விக்டோரியா மாகாணத்தில் புதிய வகை வைரசான ஒமைக்ரான் பரவியிருக்கும் என்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை என்று விக்டோரியா சுகாதாரத்துறை அமைச்சர்
Martin Foley கூறியுள்ளார். தற்போது மாகாணத்தில் 12 ஆயிரத்து 728 பேர் வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய டெல்டா வகை வைரஸ் பாதிப்பால் இதுவரை 527 பேர் உயிரிந்துள்ளனர். உயிரிந்தவர்களின் வயது சராசரியாக 50 முதல் 90 ஆக உள்ளது.

மருத்துவமனையில் 288 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் தீவிர சிகிச்சை பிரிவில் 41 பேர் அனுதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

Another 149 thousand infected in Victoria. No wonder the Omicron strain virus is spreading.இந்நிலையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 19 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாகாணத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு விரைந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் உட்பட பல்வேறு மாகாணங்கள் தொற்று பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதேநேரத்தில் இந்த ஒமைக்ரான் தொற்று ஏற்கனவே பரவி இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley.

கூறியுள்ளார். பெருந்தொற்று மசோதா மேல் சபையில் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதன் மூலமாக புதிய கட்டுப்பாடுகளை உருவாக்க முடியும் என்றும், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை Martin Foley தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3poZ7Tz