Breaking News

விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஆயிரத்து 312 பேருக்கு வைரஸ் பாதிப்பு : சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஒரேநாளில் ஆயிரத்து 312 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முறையே 90 மற்றும் 80 வயதுடைய 5 பேர் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Another 1312 people infected with the virus in the state of Victoria. 5 died after receiving treatment..அதேநேரத்தில் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருந்து அபுதாபி வழியாக மெல்போர்ன் வந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இருவருக்கு இதே வகை வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்றும், அவர்களின் மரபணு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Casey, Brimbank பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பின் அறிகுறிகள் தென்படுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் இவர்களின் வீடுகளில் இருந்தவர்களுக்கும் கோவிந்தனின் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மரபணுக்களும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவிலிருந்து விக்டோரியா அவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாணத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரம் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் புறப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Another 1312 people infected with the virus in the state of Victoria. 5 died after receiving treatment.போட்ஸ்வானா, லெசெதோ, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், ஷீஷெல்ஸ், மாலாவி, ஈட்ஸ்வானா ஆகிய பகுதிளில் இருந்து வருவோருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விக்டோரியாவில் 11 ஆயிரத்து 331 பேர் வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை டெல்டா வகை வைரஸ் பாதிப்பால் 577 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 303 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 27 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

Link Source: https://ab.co/3oMl6Vq